கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு கண்டி பிரதான வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் ஐவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இராணுவத்தினரின் ஜீப் வண்டியொன்றும் எரிபொருள் பௌசர் ஒன்றும் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.