சுக்குநூறாக உடையும் சஜித் அணி!

  எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் வந்துவிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறுகையில்

“எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது. இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது.

தற்போது சஜித் கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன், ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம் வந்துவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.