பாணின் விலை குறைப்பு!

இலங்கையில் 450 கிராம் நிறைக் கொண்ட பாண் இறாத்தல் உட்பட, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை, நேற்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம், விலைக்குறைப்பினை மேற்கொள்ள கடந்த வாரம் இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை, வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு விலையை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ஷாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் உணவுப் பொருட்களின் விலை குறைப்பானது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.