மலேசிய செல்ல இருப்போருக்கான செய்தி!

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏர் ஏசியா (Air Asia) மற்றும் பாடிக் ஏர் (Batik Air ) ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் கோலாலம்பூருக்கும் கொழும்புக்கும் இடையே விமானங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் உயர் ஆணையர் பட்லி ஹிஷாம் தெரிவித்தார்.

அதன்படி வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை தருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சிலரை இலங்கை ஈர்க்க முடியும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.