ராஜாங்கனை சத்தா ரதன தேரரைவிளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ராஜாங்கனை சத்தா ரதன தேரரை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (21.06.2023) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் வைத்து கைதான தேரர்

கடந்த மே மாதம் 28ஆம் திகதி அநுராதபுரத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.