விபச்சார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

விபசார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு பாலியல் நோய் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாணந்துறையில் நடமாடும் விபச்சார விடுதியை சோதனையிட்டு கைது செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவருக்கு சமூக நோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த மே மாதம் 21ஆம் திகதி அங்குருவாதொட்ட ரெமுன ஏரிக்கு அருகில் பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினரால் பிரதான சந்தேகநபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மொரட்டுவையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் பலருடன் சேர்ந்து பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இரகசியக் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், கடை ஒன்றின் உரிமையாளரிடம் வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் இருந்தபோது, ​​பணப்பையை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர்களுடன் இணைந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொனோரியா நோயினால் பாதிக்கப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடைய யுவதி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது விபச்சார விடுதிகளுக்கு செல்லும் ஆண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.