யாழ் வல்வை பகுதியில் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட சடலம்

  யாழ்ப்பாணம் வல்வை தொண்டமானாறு வீதிக்கு அருகாமையில் இன்று (22) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே, சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிற நிலையில் இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டிதுறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிழந்த நபர் அடையாளம் காணப்படாத நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.