கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (24-06-2023) சனிக்கிழமை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே 16 மணி நேர நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக காரணம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.