மேலும் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் இலங்கை

  இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இந்த பேச்சுவாா்த்தை ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.