கடனட்டைக்கான வட்டி வீதங்கள் குறைப்பு!

இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.