வங்கிகளில் இருக்கும் மக்களின் பணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மக்களின் வங்கி வைப்புத் தொகையை பாதிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (26.06.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

யாரும் அச்சப்பட வேண்டாம்
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் யாரும் அச்சப்பட வேண்டாம். இது தொடர்பில், நாடாளுமன்ற விவாதத்திற்கு தேவையானால் இரண்டு நாட்களைக் கூட வழங்க முடியும்.

இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி விவாதத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

தேவையென்றால் அதனை வேறொரு நாளில் விவாதிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.