குத்தகைக்கு விடப்படும் மின்சாரசபை காணிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேபிடல் முதலீட்டில் எல்எல்சி நிறுவனத்திற்கு இலங்கை மின்சார சபையின் (CEB) கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை சொகுசு ஹோட்டல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேபிடல் முதலீட்டில் எல்எல்சி, மவுஸ்ஸகலே நீர்த்தேக்கத்தை அண்டிய நிலத்தையும் அதே நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவையும் சுவீகரிப்பதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

25 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடி வெளிநாட்டு முதலீடாகப் பயன்படுத்தி ஹோட்டல் வளாகத்தை நிர்மாணித்து நடத்தும் திட்டத்திற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணிகள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பான பிரேரணை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து குறித்த நிறுவனங்களின் உடன்படிக்கையை பெற்று உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.