போதைப் பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார். 

பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர்  திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.