பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இந்த வருடத்திற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், தற்போது தேவை இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்காமல், இதனையே தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த தீர்மானத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.