கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல்!

 கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் ஒருவரும் இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாட்டர் லூ பல்கலைக்கழகத்தின் வகுப்பறை ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நபர் மாணவரா அல்லது ஆசிரியரா பல்கலைக்கழக பணியாளரா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் பல்கலைக்கழக சமூகத்திற்குள் இடம்பெற்ற ஒன்று எனவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.