இலங்கை பெண்களை தேடி வரும் வாய்ப்பு!

  கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகமைகள்

இதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் புலமைத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இதற்காக விண்ணப்பிப்பவர்கள் கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.