வீடு புகுந்து சிறைச்சாலை அதிகாரியை தாக்கிய நபர்கள்

மினுவாங்கொடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த சில நபர்கள் அந்த அதிகாரியைத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

காயப்படுத்திய சந்தேக நபர்கள் பியகம மற்றும் சபுகஸ்கந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்காக சந்தேக நபர்கள் பயணித்த வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிவத்துடுவ, ஹெய்ந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 25, 27, 41 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.