தேயிலை விலை குறைப்பு!

தேயிலையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை மாற்றம் என்பன இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேயிலையின் விலை

ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 1500 ரூபாவாக இருந்தாலும் அது சுமார் 1000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தேயிலை தொழிலை பராமரிப்பதில் பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

250, 260, 270 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கச்சா தேயிலையின் விலை சுமார் 165 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.