ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவன்

நோர்ட்டன் பிரிட்ஜ்ஜில் இருந்து 13 வயது சிறுவன் ஆட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நோர்ட்டன் பிரிட்ஜ், கொத்தேலேன முருத்தன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தமது வீட்டில் ஆட்டுத் தொழுவத்தில் தொங்கிய நிலையிலேயே தனது மகன் சடலமாக சனிக்கிழமை (01) மாலை மீட்கப்பட்டுள்ளார் என அச்சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

13 வயதான எஸ். பிரதாப்சின் என்ற சிறுவனனே உயிரிழந்துள்ளதாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.