இன்று மட்டும் சிறுவர்களுக்கு இலவசம்

  தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87 ஆவது ஆண்டு நிகழ்வினை கொண்டாடும் நிலையில் , தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.