மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சீன விமானம்

  மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை சீனாவின் (Air China)ஆரம்பித்துள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான CCA-425 ரக விமானம் நேற்று இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வரவேற்க சென்ற சீனத் தூதுவர்

விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான பணியாளர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேவேளை (Air China) விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவில் இருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதுடன், மீண்டும் அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவிற்கு புறப்பட உள்ளது.

முதலாவது விமானத்தை வரவேற்பதற்காக இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.