கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம்  அதிகளவான வெப்பநிலை தொடர்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

றொரன்டோ மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் வெப்பநிலையை காணப்படும் காலப்பகுதியில் அதிக அளவு நீர் அருந்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா, ஒன்றாரியோ, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.