வவுனியாவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை ஏ9 வீதிஅரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் கனரக வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில்,

எதிர்த் திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதுடன் 600 மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச் சென்றுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக பலியான இளம் குடும்பத்தர் !
Next articleஇன்றைய ராசிபலன்06.07.2023