நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்

  தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கொள்ளைக்காரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு பயந்து தென் மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான பாதாளக் குழுவினர் கொழும்புக்குத் தப்பிச் சென்றுள்ளதாக  பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.