மன்னார் கடற் கரையில் கரையொதுங்கிய இந்திய கப்பல்

இந்தியாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்றைய தினம் (07-07-2023) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் இந்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.