கொழும்பு மக்களுக்கான அவசர அறிவிப்பு!

  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

2,138 டெங்கு நபர்கள்

கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.

அதோடு குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில்  கொழும்பில் டெங்கு நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும்   அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என தெரிவித்த  வைத்தியர்  மக்கள் டெங்கு குறித்து அவதானமாயிருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.