முகப்புத்தக விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது!

முகப்புத்தக சமூக வலைத்தளத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பன்வில, மடோல்கல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில காவல்துறை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த விருந்தில் 13 பெண்கள் உட்பட 112 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

விருந்து ஏற்பாடு

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்தினை ஏற்பாடு செய்த இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவலை, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.