பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் கைது!

பிரபல பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது மனைவி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுகம சஹான் எனப்படும் சஹான் அரோஸ் ஜயசிங்க என்பவரின் மனைவியே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹான் என்பவரின் வங்கிக் கணக்கில் 25 கோடி ரூபா பணம் வைப்பலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத சொத்து குவிப்பு

சஹான் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண் டுபாய் நோக்கி விமானம் மூலம் செல்வதற்கு முயற்சித்த போது பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் குறித்த பெண்ணுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இந்தப் பெண் வெளிநாடு செல்லக்கூடாது என தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்ற விசாரணைப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.