வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வைத்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளது. 

இதனை தடுப்பதற்கு யானைக்கு வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வவுனியா கள்ளிக்குளம் – சிதம்பரம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு யானைக்கு வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.