2048 அபிவிருத்தி பயணத்தில் எந்தவொரு மக்களையும் கைவிட்டு செல்ல அரசு எண்ணவில்லை!

தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சுகாதார துறையின் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, ஏதேனும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட மேலதிக செயலாளர், சில மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் போது அவற்றில் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்காக சுகாதார சேவைகள் சபை விரைவாக சிகிச்சை வழங்குவதாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த மருந்து பாவனையை தவிர்ப்பதற்கு பொருத்தமான முறையை சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகவும் தெளிவுப்படுத்தினார்.

2048 அபிவிருத்தி பயணத்தில் வறுமையிலுள்ள எந்தவொரு மக்களை  இனத்தையும் கைவிட்டு செல்லுவதற்கு அரசாங்கம் நினைத்ததில்லை. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மேலும், இதுவரை சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 747  குடும்பங்களில் 7 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகாத பயனாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் கொடுப்பனவுகள் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பில் ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்கு 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தன. அந்த கால அவகாசம் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய குறித்த காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 9 இலட்சத்து 82,770 ஆட்சேபனைகளும் , 62,368 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கிடைக்கப் பெற்றுள்ள ஆட்சேபனைகளில் 650,000 பயனாளிகளின் பெயர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் உள்ளவாங்கப்பட்டுள்ளவையாகும். எவ்வாறிருப்பினும் இவர்கள் தமக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளனர். அதற்கமைய இவர்களை எந்த பிரிவுக்குள் உள்வாங்குவது அல்லது ஏற்கனவே இவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள பிரிவு சரியா என்பது குறித்தும் மீளாய்வு செய்யப்படுகிறது.

அதேபோன்று இதுவரை சமூர்த்தி கொடுப்பனவைப் பெறும் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 747  குடும்பங்கள் அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பித்துள்ளன. இவற்றில் 7 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய சமூர்த்தி பயனாளிகளில் 70 சதவீதமானோர் அஸ்வெசும பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், அங்கவீனமுற்றோர், முதியோருக்கான கொடுப்பனவு, நீரிழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவோருக்கான புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை அவர்களுக்கு பழைய முறைமையின் கீழ் கொடுப்பனவுகளை செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, எவ்வித ஆட்சேபனைகளுக்கும், எதிர்ப்புக்களுக்கும் உள்ளாகாத பயனாளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் கொடுப்பனவுகள் செலுத்தப்படும். அத்தோடு ஆகஸ்ட்டில் அடுத்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். அந்த விண்ணப்பங்களுக்கமைய தற்போதைய பெயர்ப்பட்டியல் புதுப்பிக்கப்படும். அதற்கமைய இதே முறைமையில் தகுதியானோருக்கும் மீண்டும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

சிலர் குறிப்பிடுவதைப் போன்று அஸ்வெசும திட்டத்தில் உயர் வருமானம் பெறுவோர் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், கொடுப்பனவுகளைப் பெறுவோரின் பெயர் விபரங்களை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 147 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடு மற்றும் உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதனை 187 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ள திட்டத்துக்கமைய 20 இலட்சம் குடும்பங்களுக்கும், முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் உள்ளிட்ட 5 இலட்சம் தனிநபர்களுக்கும் நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு வருடாந்தம் 206 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியேற்படும்.

இந்த திட்டங்களை விமர்சிப்பவர்களால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதற்கான மாற்று திட்டங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. இதேவேளை, இம்முறை பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமை குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும், எதிர்க்கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் மலையக பிரதிநிதிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். எனவே ஆகஸ்டில் அஸ்வெசும பெயர்ப்பட்டியல் புதுப்பிக்கப்படும் போது தற்போது விடுபட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிச்சயம் உள்வாங்கப்படுவர். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது. 2048 அபிவிருத்தி பயணத்தில் வறுமையிலுள்ள மக்களை கைவிட்டுச் செல்ல அரசாங்கம் தயாராக இல்லை. எனவே தகுதியுடைய அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர் என்றார்.

இவ்வாறு மருந்துகளைக் கொள்வனவு செய்வதானது இன்று நேற்று அல்ல முன்னொரு காலத்திலிருந்தே நடைபெறுவதற்காகவும் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.