யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ள இளம் குடும்ப பெண்!

   யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, நேற்றையதினம் (12) மாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பத் தகராறையடுத்து அலரி விதையை மிக்சியில் அரைத்து குடித்து பெண்  உயிரை மாய்த்துளதாக  கூறப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.