கனடாவில் காட்டுத் தீயில் சிக்கி தீயணைப்பு படை வீராங்கனையொருவர் உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெவல்ஸ்டோக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு, ஆயிரம் தீயணைப்புப் படையினர் உதவி தேவை என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் அவசர நிலைமை முகாமைத்துவ அமைச்சர் போவின் மா இந்தக் கோரிக்கையை , மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.