உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

  மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் இன்று (15) மட்டு நகர் வாவிக்கரைவீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த 74 வயதுடைய சங்கரப்பிள்ளை கதிர்காமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

 கடந்த 5 ம் திகதி வீட்டை விட்டு காணாமல் போயுள்ள நிரையில் அவரை தேடியபோது அவர் கிடைக்காத நிலையில் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

 பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதுடன் அவருக்கு நீண்ட காலமாக நோய் ஏற்பட்டுள்ள நிலையில் நோய் சுகமடையாது இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 சடலம் பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.