இஞ்சியின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி வியாபாரத்தில் சில்லறை வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளைச்சல் குறைந்ததால் இஞ்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.