4 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

அளுத்கமவில் வீட்டுத்தொகுதியின் 4 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அளுத்கம – போகமுவ பிரதேசத்தில் பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சத்துரிக்கா மதுஷானி அபேரத்ன என பொலிஸார் தெரிவித்தனர்.

4 ஆவது மாடியில் இருந்து விழுந்த மனைவியை கம்பஹா வைத்திசாலையில் கணவன் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.