அரசியல்வாதிகளுக்கு விருந்து வைக்கும் ஜனாதிபதி

ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். 

 இன்று இரவு இடம்பெறும் இந்த விருந்திற்கு அமைச்சர்கள் உறுப்பினர்கள மாத்திரமின்றி அவர்களின் மனைவிகளையும் அழைக்க ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளார். 

வழங்கப்பட்ட அறிவித்தல்

ஜனாதிபதி செயலகத்தினால் நேற்றும் இன்றும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கு மேலதிகமாக நேற்று மாலை இடம்பெற்ற அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் ஆரம்பத்திலும், கூட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் ஜனாதிபதி இது தொடர்பில் நினைவூட்டல் விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.