உறங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு யானையால் நிகழ்ந்த சோகம்

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் அந்த வீட்டில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவரது பேத்தி காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை தெஹிகொல்ல கிராமத்தில் இன்று (19) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டவர்கள்

குடகலய தெஹிகொல்ல பகுதியைச் சேர்ந்த ஈ.ஜி.தயவதி என்ற 68 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதோடு அவரது பேத்தி பியுமி லக்ஷானி (23) படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2:30 மணியளவில் பாட்டியும் பேத்தியும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாட்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.