ஆடி முதல் கிழமைகளில் இதனை மட்டும் செய்து பாருங்கள்

ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும்.

குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின் ஆயுள் பெருகவும் அம்பிகையை வேண்டி, வரம் பெறும் காலம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நாளாகும்.

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபடுவதால் நம்மை சுற்றி உள்ள தீமைகள் விலகும்.

ஆரோக்கியம், செல்வம், ஞானம் ஆகியவை கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் பெறுவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும்.

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் வழிபாடு செய்ய முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிக்கிழமையாவது வழிபாடு செய்ய வேண்டும். 

ஆடி வெள்ளி வழிபாடு

ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபட்டு, வேண்டிய வரங்களை பெறுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.

இருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட மிகவும் உயர்வான காலமாகும்.

ஆடி மாதத்தில் அம்மனின் பல்வேறு ரூபங்களை வழிபட்டு பயன்பெறலாம்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் முப்பெரும் தேவியர்களையும், சப்த கன்னியர்களையும், குல தெய்வங்களில் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதாகும்.

காளி வழிபாடு

முப்பெரும் தேவியர்களில் முதல் தேவியாக இருப்பவர்கள் துர்க்கை.

துர்க்கா தேவி தம்முடைய பக்தர்களை பாதுகாக்கும் அன்னையாக விளங்கக் கூடியவள்.

இவளை காளி தேவியாக பாவித்து ஆடி வெள்ளியில் வழிபட வேண்டும். காளி என்றாலே அழிக்கும் தெய்வம் என்று அனைவருக்கும் தெரியும்.

அம்பாளின் உக்கிர வடிவமான காளி நம்முடைய துக்கங்கள், துயரங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை அழிக்கும் தெய்வமாவாள்.

அது மட்டுமல்ல காளி, ஞானத்தின் வடிவமானவள். காளியை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு உயர்வான ஞானம் கிடைக்கும்.

ஆடி முதல் வெள்ளி வழிபாட்டு முறை

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகிறது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையானது ஜூலை 21 ம் தேதி வருகிறது.

இந்த நாளில் ராகு கால வேளையான காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

அலுவலகம் செல்பவராக இருந்தால் காலையிலோ அல்லது மாலை 7 மணிக்கு பிறகோ இந்த வழிபாட்டினை செய்யலாம்.

வீட்டில் காளி படம் இருந்தால் அதையோ அல்லது ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தையோ எடுத்துக் கொள்ளலாம்.

[1HCBH

ஒரு மனை அமைத்து அதில் சிவப்பு நிற துணி விரித்து அல்லது கோலமிட்டு அம்மனின் படத்தை வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

அம்பிகை முன் வெற்றிலை அல்லது ஒரு காகிதம் வைத்து காளி தேவிக்குரிய மந்திரங்களை சொல்லி குங்குமம் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.