யாழில் ஆணும் பெண்ணும் கைது!

  யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயினுடன் ஆணும், கோடாவுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது. சம்பவத்தில் 40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 24 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டார்.

பெண் பிணையில் செல்ல அனுமதி

சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆனைக்கோட்டைப் பகுதியில் கோடாவுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு தவணையிடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வுத் தகவலுக்கமைய 28 லீற்றர் கோடாவை பெண்ணொருவரிடமிருந்து பொலிஸார் மீட்டதுடன் கைதான பெண் கடந்த திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிமன்று சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கை தவணையிட்டுள்ளது.