நீண்டநாளாக யாழில் சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகத்த்திற்கு உட்ப்படுத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை  கைது செய்யபட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தந்தை இரவில் கடற்தொழிலுக்கு செல்லும் வேளையில் சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் சிறிய தந்தை சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியில் பிரதேச செயலக அதிகாரிகளால் சிறுவர் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.