இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் இது 3.3 ரிக்டராக பதிவாகியுள்ளது.