பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் போன்று நடித்து கொள்ளை!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று நடித்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொக்குனுவிட்ட பிரதேசத்தில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க, கொஸ்கம, இங்கிரிய, கிரிந்திவெல மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயினுடன் பிரதான சந்தேக நபர் கைது

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே ஏனையவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.