பங்களாதேஷ் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.

பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் கொள்ளளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.