மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கேரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது.

அதேசமயம் மற்ற காய்கறிகளின் மொத்த விலை 30 சதவீதமும், கெக்கிரி, வெள்ளரி மொத்த விலை 100 சதவீதமும் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.