வீடொன்றில் இனம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல்!

திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.