தவறான முடிவால் உயிரை மாய்த்துள்ள இளம் குடும்பஸ்தர்

வாழைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அலாப்தீன் (வயது – 30) என்ற இவர் இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பட்ட குடும்பத்தகராறு

மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த வேளை கணவன் மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தவறான முடிவெடுத்து கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிருகோணமலையில் மீன் விலை அதிகரிப்பு!
Next articleயாழ் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகிய பல தகவல்கள்