தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று (24) தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக  உயர்ந்துள்ளது.

அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக காணப்பட்டது.

இன்றைய தங்கவிலை நிலவரம்

செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்று (24) 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய விலைகளின் படி 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. மேலும் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலையானது 170,000 ரூபாவை கடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகிய பல தகவல்கள்
Next articleபூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் யாழ் பல்கலை மாணவர்கள்