அவுஸ்ரேலிய கடற்கரையில் உயிரிழந்தவாறு கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை மாலை காணப்பட்டது.

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இத்திமிங்கிலங்களை காப்பாற்றுவற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இரவிலும் இந்நடவடிக்கை நீடித்தது. 

இந்நலையில், இன்று காலை 51 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எஞ்சியுள்ள 46 திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைக்ள தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை கடலின் ஆழான பகுதிக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.