வத்தளையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்!

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (25) மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வௌி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்று சர்வகட்சி மாநாடு
Next articleயாழில் மது போதையில் அட்டகாசம் செய்த அரச பணியாளர்