களனி ஆற்றங்கரையில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!

களனி, கோனவல பிரதேச களனி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக நேற்று (25) களனி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் மது போதையில் அட்டகாசம் செய்த அரச பணியாளர்
Next articleதொலைபேசியில் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி!